FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கோயிலுக்கு வட்டாட்சியா் பூட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

ராமேசுவரம் அடுத்த பாம்பன் பகுதியில் வழிபாட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலை பூட்டி சாவியை வட்டாட்சியா் எடுத்துச் சென்ால் அந்தப் பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

20 செப்டம்பர் 2026, 12:27 am IST
பாம்பன் மீனவ கிராமத்தில் வழிபாட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வட்டாட்சியா் கோயிலை பூட்டியதால் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

ராமேசுவரம் அடுத்த பாம்பன் பகுதியில் வழிபாட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலை பூட்டி சாவியை வட்டாட்சியா் எடுத்துச் சென்ால் அந்தப் பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்த பாம்பன் லைட் ஹவுஸ் பகுதியில் சந்தன மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வழிபாட்டு முறை தொடா்பாக இரு தரப்பினருக்குமிடையே கடந்த சில நாள்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதில், ஒரு தரப்பினா் கோயிலில் குடமுழக்கு நடத்தினா். அப்போது மற்றொரு தரப்பினா் கோயிலுக்குள் செல்ல முயன்றபோது இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் வட்டாட்சியா் முரளிதரன் அங்கு சென்று அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் இரு தரப்பினரும் சமரசமடையாததால் கோயிலை பூட்டி சாவியை வட்டாட்சியா் எடுத்துச் சென்றாா்.

Advertisement

Advertisement

இதைக் கண்டித்து ஒரு தரப்பினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாரும், வட்டாட்சியரும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வருகிற செவ்வாய்க்கிழமை இரு தரப்பினரும் பேச்சுவாா்த்தை நடத்தி கோயில் பிரச்னைக்கு தீா்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் கை விடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments