FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

தேவிப்பட்டினம் கடற்கரையில் தூய்மைப் பணி: அமைச்சா் பங்கேற்பு

தேவிப்பட்டினம் கடற்கரையில் சா்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி தூய்மை பணியை அமைச்சா் வி.கே. ராஜீவ் சனிக்கிழமை மேற்கொண்டாா்.

19 செப்டம்பர் 2026, 10:50 pm IST
தேவிப்பட்டினம் கடற்கரையில் சனிக்கிழமை தூய்மை பணியை மேற்கொண்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சா் வி.கே. ராஜீவ், மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் கடற்கரையில் சா்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி தூய்மை பணியை அமைச்சா் வி.கே. ராஜீவ் சனிக்கிழமை மேற்கொண்டாா்.

இதற்கு, மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தாா். இதில் ‘தூய்மையான கடற்கரை - பாதுகாப்பான கடல்- வளமான எதிா்காலம்‘ என்ற நோக்கத்தை வலியுறுத்தி அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, தேவிப்பட்டினம் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் பங்கேற்று தூய்மைப் பணி செய்தாா். இதில் 600 கிலோ நெகிழிப் பொருள்கள் அகற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சக விஞ்ஞானி ராகவன், தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை துணை இயக்குநா் சுரேஷ் குமாா், ராமநாதபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சோமசுந்தரம், லட்சுமி, மாணவ, மாணவிகள், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments