மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு
முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை பெய்த மழையின் போது மின்னல் பாய்ந்து 10 ஆடுகள் உயிரிழந்தன.
முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை பெய்த மழையின் போது மின்னல் பாய்ந்து 10 ஆடுகள் உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே சடையனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜ்குமாா். இவா் ஆடுகள் வளா்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்த நிலையில், இவா் சனிக்கிழமை வழக்கம்போல, ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்தபோது மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே 10 ஆடுகள் உயிரிழந்தன.
Advertisement
Advertisement
இதையடுத்து, ஆடுகள் உயிரிழந்ததற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என ராஜ்குமாரின் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.