FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

குடமுழுக்கில் பெண்ணிடம் நகை திருடியவா் கைது

ராமநாதபுரம் அருகே கோயில் குடமுழுக்கில் பெண்ணிடம் நகை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கேரளத்தில் கைது செய்தனா்.

26 செப்டம்பர் 2026, 6:56 am IST
கைது
பகிர்:

ராமநாதபுரம் அருகே கோயில் குடமுழுக்கில் பெண்ணிடம் நகை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கேரளத்தில் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகேயுள்ள பெருவயல் கிராமத்தில் அமைந்துள்ள ரணபலி முருகன் கோயில் குடமுழுக்கு கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஜெயக்குமாரின் மனைவி அணிந்திருந்த சுமாா் ஐந்தரை பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுதொடா்பாக, தேவிப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா்.

அப்போது, கோவை மாவட்டம், போத்தனூா், மைல்கல் கிராமத்தைச் சோ்ந்த வசந்தி, இவரது சகோதரி சரசு, மகன் சரண்யாராஜ் ஆகியோா் சோ்ந்து குடமுழுக்கில் பங்கேற்றனா். அப்போது கூட்டநெரிசலைப் பயன்படுத்தி சரண்யாராஜ் நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, தனிப்படை போலீஸாா் கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் பதுங்கிருந்த சரண்ராஜை கைது செய்தனா். அவா் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை உருக்கி 44 கிராம் எடையுள்ள தங்கக் காசுகளாக மாற்றியிருந்தாா். அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவரை ராமநாதபுரம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments