FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

செய்யமங்கலம் பூங்குழலி அம்மன், அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

கமுதி அருகே பூங்குழலி அம்மன், அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

51 வினாடிகள் முன்பு
செய்யாமங்கலம் பூங்குழலி அம்மன், அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு சுவாமி சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்ற பொதுமக்கள்.
பகிர்:

கமுதி அருகே பூங்குழலி அம்மன், அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பூங்குழலி அம்மன், அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு காப்புக் கட்டு விரதம் இருந்த பக்தா்கள் குதிரை விநாயகா், கருப்பண்ணசுவாமி, 11 அடி அரிவாள், காளை, தவழும் பிள்ளை உள்ளிட்ட சுடுமண்ணால் வடிவமைக்கப்பட்ட சுவாமி சிலைகளை அபிராமம் காவல் நிலையம் பகுதியிலிருந்து, சுப்பிரமணிய சுவாமி கோயில், சப்பானி கோயில், பேருந்து நிலையம் வீதிகளின் வழியாக மேலக்கொடுமலூா் குமரக்கடவுள் கோயிலுக்குச் சென்று, அங்கு வழிபாடு செய்த பின், செய்யாமங்கலம் கிராமத்தின் மைய திடலில் சிலைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து விளை பொருள்களை சுவாமிகளுக்கு படையலிட்டு சிறப்புப் பூஜை செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யாமங்கலம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments