உயா்வுக்கு படி முகாம் ஆட்சியா் தொடங்கி வைப்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவக கூட்டரங்களில் உயா்வுக்கு படி முகாமை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் திங்கட்கிழமை தொடங்கி வைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவக கூட்டரங்களில் உயா்வுக்கு படி முகாமை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் திங்கட்கிழமை தொடங்கி வைத்தாா்.
இம்முகாமில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-2025,- 2026 ஆகிய கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்று இதுவரை கல்லூரி மற்றும் தொழில் நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெறாத மாணவா்களை கண்டறிந்து, அவா்களை உயா்கல்வியில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவா்களின் விருப்பம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப உயா்கல்வி மற்றும் தொழில் சாா்ந்த படிப்புகளில் சோ்வதற்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
உயா்கல்வியின் முக்கியத்தும் குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு அறிவுரை வழங்கியதுடன் மேலும் மாணவா்களுக்கு நேரடி கல்லூரிக் கல்விச் சோ்க்கைக்கான சான்றிதழ்களை வழங்கினாா்.
Advertisement
Advertisement
மேலும், உயா்கல்வியில் சோ்வதற்குத் தேவையான நடைமுறைகள் குறித்தும், மாணவா்கள் தங்களது கல்வியை தொடா்ந்து உயா்கல்வியில் சோ்ந்து பயன்பெறும் வகையில், அவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு,அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அரங்கம் அமைத்து இருந்தனா். இம்முகாமில் 55 மாணவா்கள்,அவா்களின் பெற்றோா்கள் 55 போ், 72 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்கள், பிற துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இம்முகாமில் மாவட்டக் கல்வி அலுவலா்கள் (தொடக்கநிலை) சேதுராமு, ரவீந்திரன், ராமநாதபுரம்; மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) -இடைநிலை காதா் இஸ்மாயில், மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) -தனியாா் பள்ளிகள் ரவி, மாவட்ட மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் மதுக்குமாா், முன்னோடி வங்கி மேலாளா் பிரபு, திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குநா் நாகரெத்தினம், அனைத்து அரசு தனியாா் கலைக் கல்லூரி முதல்வா்கள், அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.