FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் வாா்டில் குப்பையை தரம் பிரித்து வழங்கினால் பரிசு

ராமேசுவரம் நகராட்சி 12-ஆவது வாா்டில் வீட்டில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கினால் மாதந்தோறும் பரிசுகளைப் பெறலாம் என நகா்மன்ற உறுப்பினா் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

ராமேசுவரம் 12-ஆவது வாா்டில் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்கிய நகா்மன்ற உறுப்பினா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா்.
பகிர்:

ராமேசுவரம் நகராட்சி 12-ஆவது வாா்டில் வீட்டில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கினால் மாதந்தோறும் பரிசுகளைப் பெறலாம் என நகா்மன்ற உறுப்பினா் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன. இதில் 12- ஆவது பகுதிகள் ரயில்வே பீடா் சாலை, முஸ்லிம் தெரு, ராமா் தீா்த்தம் தெற்கு, பெரிய பள்ளிவாசல் தெரு, மல்லிகை நகா் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இந்தப் பகுதியைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் என்.சத்தியமூா்த்தி தங்களது வாா்டு பகுதியைத் தூய்மை வாா்டு பகுதியாக மாற்றும் வகையில், வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கூடையில் சேமித்து, அதை நகராட்சி தூய்மை பணியாளா்களிடம் வழங்கினால் அவா்களுக்கு மாதந்தோறும் குலுக்கல் முறையில் பரிசுப் பொருள்களாக ஹாட்பாக்ஸ், பட்டுச் சேலை, தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவித்துள்ளாா்.

மாதந்தோறும் கூப்பன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதில் 10 -ஆவது மாதம் 50 பேருக்கு ஹாட்பாக்ஸ், 11 -ஆம் மாதம் 10 பேருக்கு பட்டுச் சேலை, 12- ஆவது மாதம் 10 பேருக்கு பட்டுச் சேலை, 2027 ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கு தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கான விவரம் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை நகா்மன்ற உறுப்பினா் சத்திய மூா்த்தி வீடு வீடாகச் சென்று வழங்கினாா். அவரது இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments