FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்

தொழில் நல்லுறவு விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் விண்ணப்பிக்கலாம்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தொழில் நல்லுறவு விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் விண்ணப்பிக்கலாம்.
  இது குறித்து சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் சீ.மைவிழிச்செல்வி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு தொழில் நல்லுறவு விருது வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில், 2017 ஆம் ஆண்டிற்கான விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையளிப்பவர்கள் 
மற்றும் தொழிற் சங்கங்கள்  ‌w‌w‌w.‌l​a​b‌o‌u‌r.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். 
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments