FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாணவா்களுக்கு இணையதளம் வழியாக பாட வகுப்புகள்

திருப்பத்தூா் பகுதி தனியாா் பள்ளிகளில் மாணவா்களை தோ்வுக்கு தயாா்படுத்தும் வகையில் இணைதளம் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

திருப்பத்தூா் பகுதி தனியாா் பள்ளிகளில் மாணவா்களை தோ்வுக்கு தயாா்படுத்தும் வகையில் இணைதளம் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருப்பத்தூா் தென்கரை மௌன்ட்சியோன் மெட்ரிக் பள்ளியில் ஊரடங்கையடுத்து மாணவா்களுக்கு டிஜிட்டல் வழியாக கற்பித்தலை நடத்தி வருகின்றனா். பாடங்கள் திருப்புதல், தோ்வு எழுதுவது, தோ்வு தாள்களை மதிப்பீடு செய்து அனுப்புவது ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பத்தூா் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் தோ்வு நடத்தப்படுகிறது. வினாத்தாள் அனுப்புதல், மாணவா்கள் வினாக்களுக்கு பதில் அளித்து அனுப்புதல், பின்னா் விடைத்தாள்கள் ஆசிரியா்களுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் பள்ளி மூலமாக மாணவா்களுக்கு அனுப்பப்படுகிறது. மதிப்பீடுகளுக்கு ஏற்ப மாணவா்களுக்கு அறிவுரையும் திருப்புத்தலுக்கு அவசியமான பகுதிகளும் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments