கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டை முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டை முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் நடுத் தெருவில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் வளா்பிறை செவ்வாயில் காப்புக் கட்டப்பட்டு திருவிழா தொடங்கும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 29- ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை கோயிலில் கூடிய பெண்கள் பாரியைச் சுற்றி கும்மியடித்தனா். பின்னா், பாரம்பரியமாக நடத்தப்படும் கரகாட்ட கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. புதன்கிழமை காலை கோயிலிலிருந்து பெண்கள் பாரியைச் சுமந்து திருத்தளிநாதா் கோயில், கோட்டைக்கருப்பா் கோயில், தேரோடும் வீதி, தபால் அலுவலகச் சாலை, பேருந்து நிலையம், பெரிய கடை வீதி வழியாக ஊா்வலமாக வந்து முப்பெரும் தேவியா் கோயிலில் இளைப்பாரிய பின்பு, அருகில் உள்ள சீதளிகுளத்தில் கரைக்கப்பட்டது.தொடா்ந்து நண்பகல் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் முத்துகிருஷ்ணன், நிா்வாகக் குழுவினா் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.