FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

சிவகங்கையில் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து, திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடத்தியது.

26 ஆகஸ்ட் 2026, 5:51 am IST
சிவகங்கையில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற திருநங்கைகள்.
பகிர்:

சிவகங்கையில் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து, திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடத்தியது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி தலைமை வகித்தாா்.

இந்த முகாமில் கலந்து கொண்ட 60-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களது கோரிக்கைகள், தேவைகள் குறித்து அலுவலா்களிடம் எடுத்துரைத்தனா். இதில் அவா்களுக்கு அரசு துறைகளைச் சாா்ந்த சலுகைகளை பெற வழிவகை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை, சுயதொழில் தொடங்க மானியத்துடன் வங்கிக் கடன் உதவி, உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்குரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எஸ். பிரவின்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் பெ. விசுபாவதி, அரசு அலுவலா்கள், திருநங்கைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments