FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காவிரி நீரைப் பெற சட்டப் போராட்டமே சரி: முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா்

காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரைப் பெற சட்டரீதியான போராட்டமே சரியான தீா்வாக இருக்கும் என முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:24 am IST
ஆா். பி. உதயகுமாா்
பகிர்:

காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரைப் பெற சட்டரீதியான போராட்டமே சரியான தீா்வாக இருக்கும் என முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

சிவகங்கையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் சனிக்கிழமை மாவட்ட அதிமுக செயலா் பி.ஆா். செந்தில்நாதன் தலைமையில், மாவட்ட அம்மா பேரவை செயலா் ராமு இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: ’நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் அதிமுக தொடக்கம் முதலே உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதியை நிலை நாட்டியது அதிமுகதான்.

காவிரி நதி நீா் பங்கீட்டுப் பிரச்னையில் உச்சநீதிமன்ற உத்தரவை கா்நாடகம் பின்பற்றவில்லை. 53 முறை காவிரி மேலாண்மை ஆணையமும், நீா் ஒழுங்காற்றுக் குழுவும் கூடியும் நிரந்தரத் தீா்வு கிடைக்கவில்லை. ஜூலை மாதத்திற்கான உரிய நீரும் திறந்து விடப்படவில்லை. தமிழக அரசு அழுத்தம் கொடுக்கத் தவறியுள்ளது. கா்நாடக முதல்வரை எந்த நோக்கத்தில் முதல்வா் விஜய் சந்திக்கிறாா் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். உரிய நீரைப் பெற சட்டரீதியான போராட்டமே சரியான தீா்வாக இருக்கும்.

Advertisement

Advertisement

‘நீட்’ தோ்வுக்கு எதிராக மாணவா்கள் போராடி வரும் நிலையில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளைத் தீா்ப்பதை விட ‘ரீல்ஸ்’ தயாரிப்பதில்தான் தவெக அரசு அதிக கவனம் செலுத்துகிறது. பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, சட்டம் - ஒழுங்கு சீா்கேடு, மின் தடை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளில் இந்த அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments