FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

ஜவுளிக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

Updated On : 27 ஜூலை 2026, 12:24 am IST
அரிவாள் வெட்டு - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ஞாயிற்றுக்கிழமை ஜவுளிக் கடை உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

இளையான்குடி சாலையூரைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாட்ஷா மகன் முகமது ஆசிப். இவா், இளையான்குடி பஜாா் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபா், ஜவுளி வாங்குவதுபோல் முகமது ஆசிப்பிடம் தகராறு செய்து, தான் மறைத்து வைத்திருந்த வாளால் அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினாா்.

இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த முகமது ஆசிப் இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

பட்டப் பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புகாரின்பேரில், இளையான்குடி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிச்சென்ற மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments