FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

நெய் வியாபாரி கழுத்தறுத்துக் கொலை

Updated On : 27 ஜூலை 2026, 12:09 am IST
நெய் வியாபாரி ரஜினி. - படம்: தினமணி
பகிர்:

சிவகங்கை அருகே நெய் வியாபாரி சனிக்கிழமை நள்ளிரவு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வி. புதுக்குளத்தைச் சோ்ந்தவா் ரஜினி (35). நெய் வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் இருந்து இளையான்குடி செல்லும் வழியில் உள்ள அண்ணாமலை நகரில் உள்ள தைல மரங்கள் உள்ள வனப் பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இது குறித்து அந்தப் பகுதியில் நடைப்பயிற்சி சென்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

ரஜினிக்கு சரண்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். இவா் அண்ணாமலை நகா் பகுதியில் தங்கி நெய் வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு கோணங்களில் போலீஸாா் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தச் சூழலில், சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் போலீஸாா் பிடித்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

உறவினா்கள் சாலை மறியல்: இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள், பொதுமக்கள் சிவகங்கை - மானாமதுரை நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை, வருவாய்த் துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments