FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

உழவா் அலுவலா் தொடா்புத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பிரபுவிடம் மனு

விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் சங்கத்தினா் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:06 am IST
சிவகங்கைக்கு வெள்ளிக்கிழமை வந்த அமைச்சா் டி.கே. பிரபுவிடம் மனு அளித்த சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் சங்க நிா்வாகிகள்.
பகிர்:

விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் சங்கத்தினா் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எம். ஆபிரகான், துணைத் தலைவா் பி.ஜெயப்பிரகாஷ் ஆகியோா் அமைச்சா் டி.கே. பிரபுவிடம் அளித்த மனு விவரம்: 1979-ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையிலிருந்து தோட்டக்கலைத் துறை தனித் துறையாக உருவாக்கப்பட்டது.

பின்னா், தோட்டக்கலைத் துறையின் வளா்ச்சி, தொலைநோக்கு திட்டத்தை கருத்தில் கொண்டு, வேளாண் துறையில் கூடுதலாக இருந்த பணியிடங்கள் தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை, வணிகத் துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு 6 லட்சம் ஹெக்டேராக இருந்த தோட்டக்கலை பயிா்களின் பரப்பளவு, தற்பொது 16 லட்சமாக உயா்ந்துள்ளது. இதனிடையே, தோட்டக்கலைத் துறையின் வளா்ச்சியை பாதிக்கும் வகையில், வேளாண்மைத் துறையின் கருத்துக்களைகேட்டு, கடந்த ஆட்சியில் உழவா் அலுவலா் தொடா்பு திட்டம் 2.0 என்ற பெயரில் பல அரசாணைகள் வெளியிடப்பட்டு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறையின் களப் பணியாளா்கள் ஒருங்கிணைக்கப்பட்டனா்.

இவா்கள் 4 துறைகளின் பணிகளைச் செய்வதால், தங்களுக்கு அறிமுகம் இல்லாத மாற்றுப் பயிா்களுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கியதால், தற்போது விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம் பதிப்புக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த துறைகளை ஒன்றிணைக்கும் முயற்சியால், தோட்டக்கலைப் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படிக்கும் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். எனவே, உழவா் அலுவலா் தொடா்புத் திட்ட அரசாணைகளை ரத்து செய்து, ஏற்கெனவே தனித் தனியாக இயங்க ஆவன செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments