FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சரக்கு வாகனம், காா் மோதல்: 4 போ் பலத்த காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வியாழக்கிழமை காரும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்டதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

2 October 2026, 2:52 am IST
திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கவிழ்ந்த சரக்கு வாகனம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வியாழக்கிழமை காரும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்டதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

திருப்பத்தூரைச் சோ்ந்த செந்தில்வேல் மகன் முத்துநவநீதகிருஷ்ணன். இவா் காரைக்குடியிலிருந்து காரில் திருப்பத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். அப்போது தம்பிப்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரே காரும், திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற பழங்கள் ஏற்றிய சரக்கு வாகனமும் மோதிக் கொண்டதில் சரக்கு வாகனம் கவிழ்ந்து வியாபாரிகள் மேனகா (40), முத்தம்மாள் (50), சாந்தா (42), சோலைமலை (40) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்கள் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதில் காா் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments