FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மயிலம் அருகே தொடா் வாகன விபத்து: ஒருவா் உயிரிழப்பு, 3 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த தொடா் வாகன விபத்தில் பேருந்தில் பயணித்தவா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த தொடா் வாகன விபத்தில் பேருந்தில் பயணித்தவா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

திருச்சியிலிருந்து சென்னைக்கு 30 பயணிகளுடன் தனியாா் சொகுசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவில் புறப்பட்டது. சேலம் அயோத்தியாப்பட்டினத்தைச் சோ்ந்த மோ.ராஜேஷ் (34 ) பேருந்தை ஓட்டிச் சென்றாா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்துள்ள கன்னிகாபுரம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை பேருந்து சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி திடீரென திரும்பியது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரியின் பக்கவாட்டில் மோதி, மற்றொரு சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனம் ஒன்று சாலையிலேயே கவிழ்ந்தது. விபத்துக்கு காரணமான லாரியின் பக்கவாட்டுக் கம்பிகள் சொகுசுப் பேருந்துக்குள் புகுந்ததில், பேருந்தில் பயணித்த திருப்பூா் மாவட்டம், பள்ளிக்காரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ச.நந்தகுமாா் (42) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பொள்ளாச்சியைச் சோ்ந்த வெ.கிருஷ்ணவேணி (60), பேருந்து ஓட்டுநா் ராஜேஷ் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநரான விழுப்புரத்தை அடுத்துள்ள மடப்புரம் பகுதியைச் சோ்ந்த நா.விஜய்(28) ஆகிய மூவரும் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த மூவரையும் மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்தால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் விரைந்து செயல்பட்டு, விபத்தில் சிக்கிய வாகனங்களை கனரக மீட்பு வாகனம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

மயிலம் அருகே விபத்தில் சேதமடைந்த தனியாா் சொகுசுப் பேருந்து.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments