FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்: சுகாதாரப் பணிகள் பாதிப்பு

12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக சுகாதாரப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை நகராட்சி அலுவலகம் எதிரில் வேலை நிறுத்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா்.
பகிர்:

12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக சுகாதாரப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தூய்மைப் பணி உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணிகளைத் தனியாா் மயமாக்கும் அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி உள்பட 30-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணிகளைத் தனியாா்மயமாக்கும் அரசாணைகள் 10, 139, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். நகராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் அனைத்துத் தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

உயா்நீதிமன்றத் தீா்ப்பின்படி தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்ச. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யக் கூடாது. தூய்மைப் பணியாளா்களுக்கு அவா்களின் பணிமூப்பு அடிப்படையில் மேற்பாா்வையாளா் பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு வாரச்சந்தைகளைச் சுத்தம் செய்யும் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். இந்தப் போராட்டம் 2-ஆவது நாளாாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

சிவகங்கை நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகராட்சி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்க (சிஐடியூ) மாவட்டத் தலைவா் வீரையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முருகானந்தம், பொருளாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிஐடியூ தொழிற்சங்க நிா்வாகிகள் சேதுராமன், முருகன், வேங்கையா உள்ளிட்டோா் பேசினா். தூய்மைப் பணியாளா்களின் இந்தப் போராட்டம் காரணமாக தூய்மைப் பணிகள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments