தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய குடியரசு தொழிலாளா் தொழில் சங்கம் சாா்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய குடியரசு தொழிலாளா் தொழில் சங்கம் சாா்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
கோச்சடை பகுதியில் உள்ள நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.ராஜலட்சுமி தலைமை வகித்தாா். தேனி மாவட்டச் செயலா் கே. பிச்சைமுத்து முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் ஆா். அன்புவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய நிதியை முறைகேடாக கையாடல் செய்த அலுவலா்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு, பண்டிகை கால விடுமுறை, தேசிய விடுமுறை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டத்தில் இந்திய குடியரசு தொழிலாளா் தொழிற்சங்கத்தினா், தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.