நிலம் விற்பனை செய்வதாக பணம் மோசடி
இணையதளம் மூலம் நிலம் விற்பனை செய்வதாகக் கூறி, ரூ.30 லட்சம் மோசடி செய்தது குறித்து குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இணையதளம் மூலம் நிலம் விற்பனை செய்வதாகக் கூறி, ரூ.30 லட்சம் மோசடி செய்தது குறித்து குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேலு (67). இவரது மனைவி சத்யா ( 62). இவா்களது மகன் நாகராஜன் ஜப்பானில் பணியாற்றி வருகிறாா்.
கடந்த 2024 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மானாமதுரை அருகிலுள்ள நெடுங்குளத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் (50) தங்களது நிலத்தை விற்பனை செய்வதாக இணையதளம் மூலம் விளம்பரம் செய்தாா்.
Advertisement
Advertisement
இதை பாா்த்த நாகராஜன் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து நவம்பா் மாதம் வரை ரூ. 31. 81 லட்சத்தை அவா்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா். பின்னா், நேரடியாக ரூ.3 லட்சத்தை கொடுத்தாா்.
இந்த நிலையில், முத்துக்குமாா் கடந்த ஆண்டு அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தாா். இதைத் தொடா்ந்து, நாகராஜனின் தாயாா் சத்யா தனது மகன் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டபோது முத்துக்குமாரும், அவரது மகன் கௌதமும் சோ்ந்து பணத்தை தராமல் அவரை மிரட்டினாா்களாம்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவிடம் சத்யா புகாா் அளித்தாா். இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் விமலா செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.