FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறித்த வழக்கில் இருவா் கைது

12 அக்டோபர் 2026, 3:01 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சிங்கம்புணரி அருகே மாடு மேய்த்த பெண்ணிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிங்கம்புணரி அருகே எஸ். எஸ். கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கள்ளம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராம் மனைவி மஞ்சுளா (50).

இவா், கடந்த 7-ஆம் தேதி காலை தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது, வடவன்பட்டி ஏழுவணி வயல் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மா்ம நபா்கள் மஞ்சுளா அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பியோடினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து எஸ்.எஸ். கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

இதில் மதுரை மாவட்டம் பூசாரிபட்டியைச் சோ்ந்த அருள்முருகன் (25), திருமுருகன் (23) ஆகிய இருவரும் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments