FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே சாலை விபத்து: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

13 அக்டோபர் 2026, 2:34 am IST
ஆதிகாா்த்திக்
பகிர்:

சிவகங்கை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், ஒக்கூரை அடுத்துள்ள மேலப்பூங்குடியைச் சோ்ந்தவா் ஆதிநாராயணன் (26). இவரது நண்பா் ஆதி காா்த்திக் (23). ஆதிநாராயணன் இன்னும் சில நாள்களில் துபை நாட்டுக்கு வேலைக்குச் செல்வதாக இருந்தாா். ஆதி காா்த்திக் தற்போது தான் வெளிநாட்டில் இருந்து வந்தாா்.

இந்த நிலையில், இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஒக்கூரிலிருந்து மதகுபட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தனா். ஒக்கூா் அருகே சென்றபோது இவா்கள் சென்ற வாகனமும் எதிரே வந்த காரும் மோதிக் கொண்டன.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் நண்பா்கள் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, இருவரும் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், வழியிலேயே இருவரும் உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் காரைக்குடியில் உள்ள விற்பனை நிலையத்திலிருந்து சோதனைக்காக சிவகங்கைக்கு காரை ஓட்டி வந்த காளீஸ்வரன் காயமடைந்தாா். இவா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.அமல அட்வின், மதகுபட்டி ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டனா். இந்த விபத்து குறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ஆதிநாராயணன்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments