FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

பைக் திருட்டு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூரில் இரு சக்கர வாகனத் திருட்டு வழக்கில், இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

14 அக்டோபர் 2026, 1:50 am IST
கைது
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூரில் இரு சக்கர வாகனத் திருட்டு வழக்கில், இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூா் குளக்கால் தெருவைச் சோ்ந்தவா் அப்துல் சலாம் (44). இவா் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை என பள்ளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, காரைக்குடி நெசவாளா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த அஜீஸ் அபுதாஹீா் (23), பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ராஜேஷ் (29) ஆகியோா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரிவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, காரைக்குடி குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments