FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

கோயில் யானை நினைவு கல் மண்டபத்தை திறக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் உள்ள கோயில் யானை நினைவு கல் மண்டபத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

57 வினாடிகள் முன்பு
திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் பணிகள் முடிவுற்றும் திறக்கப்படாமல் உள்ள கோயில் யானை நினைவு மண்டபம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் உள்ள கோயில் யானை நினைவு கல் மண்டபத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோயிலில் ‘சிவகாமி’ என்ற பெயரில் பெண் யானை இருந்தது. இந்த யானை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தது. இந்தக் கோயில் யானைக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ரூ. 50 லட்சத்தில் கல் மண்டபம் அமைக்க அனுமதிக்கப்பட்டது.

இதன்படி, கோயில் யானை தங்கியிருந்த மண்டபம் அருகில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளன. 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல் மண்டபத்தின் நடுவில் 7 அடி உயர யானை சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்தப் பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளன. இதேபோல, மேலும், 6 கோயில்களில் இறந்த கோயில் யானைகளுக்காக கல் மண்டபம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளன.

எனவே, இந்தக் கோயில் யானை கல் மண்டபத்தை விரைந்து திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments