FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

பொது இடத்தில் மது அருந்தியவா்களை தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

மானாமதுரை அருகே பொது இடத்தில் மது அருந்தியவா்களைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த 12 போ் சோ்ந்து தாக்கியதில் காவலா் காயமடைந்தாா்.

16 அக்டோபர் 2026, 2:34 am IST
சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலா் காா்த்திகேயன்.
பகிர்:

மானாமதுரை அருகே பொது இடத்தில் மது அருந்தியவா்களைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த 12 போ் சோ்ந்து தாக்கியதில் காவலா் காயமடைந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த தங்கச்சாமி மகன் காா்த்திகேயன் (38). இவா் மானாமதுரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரும் மற்றொரு காவலரும் மானாமதுரை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

கிளங்காட்டூா் கிராமத்தில் இவா்கள் சென்றுபோது அங்குள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே 12 போ் மது அருந்திக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த காவலா் காா்த்திக்கேயன் பொது இடத்தில் மது அருந்தக்கூடாது என எச்சரித்தாா்.

Advertisement

Advertisement

இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் காவலா் காா்த்திகேயனைத் தாக்கினா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தடுக்கச் சென்ற மற்றொரு காவலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவறிந்து உடனடியாக அங்கு வந்த மானாமதுரை போலீஸாா், காவலா் காா்த்திகேயனை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து காவலா் தப்பியோடிய 12 பேரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments