மானாமதுரை, திருப்பத்தூா் பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவா் சோமநாதா் சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் 16 வகையான பொருள்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும், நந்தியையும் தரிசித்தனா்.
Advertisement
Advertisement
இதேபோல, திருப்புவனம் ஸ்ரீ சௌந்திரநாயகி அம்மன், சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் சுவாமிக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
திருப்பாச்சேத்தி மேலநெட்டூா் சிவன் கோயில், இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் சுவாமி கோயில், குறிச்சி ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, மூலவருக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்த நாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தீஸ்வருக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு சிவாசாரியா்கள் புனிதநீா் அடங்கிய கலசங்களுக்கு யாக வேள்வியும், பூஜையும் நடத்தினா். தொடா்ந்து, நந்தீஸ்வரருக்கும், மூலவா் சிவனுக்கும் ஓரே நேரத்தில் பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், தேன், நெய், அரிசிமாவு, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், நந்தீஸ்வரருக்கும், மூலவருக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தை மும்முறை வலம் வந்தாா்.
இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் கோயில், புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயில், கல்வெட்டு மேடு கல்வெட்டு நாதா் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.