டெங்கு காய்ச்சல் தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்
டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு வழிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு வழிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்து உள்கொள்ளாமல், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
மேலும், போதுமான அளவு திரவ உணவுகளை (ஓஆா்எஸ் கரைசல், இளநீா், அரிசிக்கஞ்சி, பழச்சாறு போன்றவை) எடுத்துக் கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
வீடுகளில் கொசுக்கள் வளரக்கூடிய வாய்ப்புள்ள தண்ணீா் சேமிக்கும் பாத்திரங்கள், தொட்டிகள், குடங்களை முழுமையாக மூடி வைக்க வேண்டும்.
மேலும், வீட்டின் சுற்றுப்புறத்திலும், பொது இடங்களிலும் மழைநீா் தேங்கும் வகையிலான வேண்டாத பொருள்கள் (டயா்கள், தேங்காய் சிரட்டைகள், தேநீா் குவளைகள், டப்பாக்கள் போன்ற கொள்கலன்கள்) இல்லாத வகையில் பராமரிக்க வேண்டும்.
எனவே, பொதுமக்கள் பருவமழை காலத்தில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.