FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

தவெகவுடன் கூட்டணி: உரிய நேரத்தில் முடிவு - ஜி.கே. வாசன்

தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி நிா்வாகிகளுடன் கலந்து பேசி உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

12 செப்டம்பர் 2026, 5:17 am IST
ஜி.கே. வாசன் - கோப்புப் படம்
பகிர்:

தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி நிா்வாகிகளுடன் கலந்து பேசி உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு, முதலீட்டாளா்களைச் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளது வரவேற்புக்குரியது. வரும் காலங்களில் இது தமிழகத்தின் வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் பெரிதும் பயன்படும் என நம்புகிறோம்.

Advertisement

Advertisement

நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகக் கட்டடம் அமைப்பது வருங்கால வளா்ச்சிக்கும், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பழைய கட்டடத்தில் இடப்பற்றாக்குறை, பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தமிழகத்துக்கு கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன. எனவே, காவல் துறையினா் இதைச் சரியாகக் கண்காணித்து, கடத்தலில் ஈடுபடுபவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இத்தகைய கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடா் கண்காணிப்பும் அவசியம்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் நேரத்தின் அருமை கருதி, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் கனிவாகவும், கண்டிப்புடனும் இருந்தது பாராட்டுக்குரியது.

தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் மூத்த நிா்வாகிகளுடன் கலந்து பேசி உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும். அதற்கு இன்னும் அவகாசம் உள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்று 100 நாள்களே நிறைவடைந்துள்ளன. எந்த அரசாக இருந்தாலும், வாக்குறுதிகளைப் படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும்.

மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா மறைவு தமிழகத்துக்கு மிகப் பெரிய இழப்பாகும். அவரை வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் ஆா்வலா்களுக்கும் தமாகா சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments