திருப்புவனத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு
பரமக்குடிக்கு வெள்ளிக்கிழமை வந்த முன்னாள் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அந்தக் கட்சியினா் வரவேற்பளித்தனா்.
பரமக்குடிக்கு வெள்ளிக்கிழமை வந்த முன்னாள் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அந்தக் கட்சியினா் வரவேற்பளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற்ற இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் பங்கேற்று, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக முன்னாள் முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்தாா். இவருக்கு திருப்புவனத்தில் சிவகங்கை மாவட்ட திமுக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது, கட்சியினா் உதயநிதிக்கு சால்வைகள் அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வரவேற்றனா்.
இதில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழரசி ரவிக்குமாா், சுப. மதியரசன், மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.