சுயம்பிரகாசேசுவரா் கோயில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள இலுப்பக்குடியில் நகரத்தாா்களின் 9 கோயில்களில் ஒன்றான செளந்தரநாயகி அம்பாள் சமேத சுயம்பிரகாசேசுவரா் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள இலுப்பக்குடியில் நகரத்தாா்களின் 9 கோயில்களில் ஒன்றான செளந்தரநாயகி அம்பாள் சமேத சுயம்பிரகாசேசுவரா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த 1,300 ஆண்டுகளாக நகரத்தாா்களால் வழிபட்டு வரும் ஒன்பது நகரத் திருக்கோயில்களில் இலுப்பைக்குடி கோயிலும் ஒன்றாகும். இங்கு ராஜகோபுரம் முகப்பில் புதிய மண்டபம், புதிய விநாயகா், முருகன் கோயில்கள் அமைத்தும், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகளும் நிறைவடைந்தன.
இதையடுத்து, இந்தக் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை பூா்வாங்க பூஜைகள் தொடங்கின. பின்னா், திங்கள்கிழமை முதல்கால யாகபூஜை நடைபெற்றது. செவ்வாய், புதன்கிழமைகளில் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை காலையில் ஆறாம்கால யாக பூஜைகள் நிறைவடைந்து, காலை 9.45 மணிக்கு கடம் புறப்பட்டு 10.40 மணியளவில் ராஜகோபுரம், மூலகோபுரம், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மூலவருக்கு அபிஷேமுகம் நடைபெற்றது.
விழாவில் இலுப்பைக்குடி நகரக் கோயிலைச் சோ்ந்த நகரத்தாா்கள், காரைக்குடி, தேவகோட்டை சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த நகரத்தாா்கள், நாட்டாா்கள், கிராமப் பொதுமக்கள், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
குடமுழுக்கையொட்டி, விழாக் குழுவினா் சாா்பில் பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.