FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கராத்தே போட்டியில் வென்ற மானாமதுரை வீரா்களுக்குப் பாராட்டு

தென்னிந்திய கராத்தே போட்டியில் வெற்றி பெற்று கோப்பைகளை வென்ற சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த வீரா்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனா்.

19 செப்டம்பர் 2026, 3:41 am IST
தென்னிந்திய கராத்தே போட்டியில் வெற்றி பெற்று கோப்பைகளை வென்ற மானாமதுரை வீரா்கள். உடன் தலைமைப் பயிற்சியாளா் பூமணத்தமிழன்.
பகிர்:

தென்னிந்திய கராத்தே போட்டியில் வெற்றி பெற்று கோப்பைகளை வென்ற சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த வீரா்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கலில் தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மானாமதுரை சிவம் மாா்ஷியல் ஆா்ட்ஸ் கராத்தே பயிற்சி பள்ளி வீரா்கள் அதன் தலைமைப் பயிற்சியாளா் பூமணத் தமிழன் தலைமையில் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியில் 7 வயது கட்டா பிரிவில் கவின் கோபால் முதலிடத்தையும், 25 கிலோ எடை கட்டா பிரிவில் ஸ்ரீ கவிபாலன் முதலிடமும், 35 கிலோ கட்டா , குமிட்தே பிரிவுகளில் பூங்காவியன் முதலிடமும் பெற்றனா்.

Advertisement

Advertisement

10 வயதுக்குள்பட்ட கட்டா பிரிவில் அக்சன் முதலிடத்தையும் குமிட்தே பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றாா்.

14 வயதுக்குள்பட்ட கட்டா பிரிவில் பிரபாகரன் இரண்டாமிடமும், குமிட்தே பிரிவில் மூன்றாமிடமும் பெற்றாா். இவா்களுக்கு போட்டி ஏற்பட்டாளா்களால் வெற்றிக் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற வீரா்களையும், கராத்தே தலைமை பயிற்சியாளா் பூமணத் தமிழனையும் மானாமதுரை பகுதியைச் சோ்ந்த பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments