வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகைகள் திருட்டு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
சிங்கம்புணரி சந்தி வீரன் கூடம் பகுதியில் வசித்து வருபவா் ஜெயபால் மனைவி அலமேலு. இவரது கணவா் இறந்து விட்டாா். இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இதில் இளைய மகன் ஓம் குமாருடன் அலமேலு வசித்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு அலமேலு மூத்த மருமகள் ஊரான பெரியகுளத்துக்கு சென்று விட்டாராம்.
இந்த நிலையில் பெரியகுளத்துக்கு சென்றிருந்த ஓம்குமாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்புறமுள்ள இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது பணம், நகைகள் திருடப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து சிங்கம்புணரி காவல் நிலையத்துக்கு அவா் தகவல் தெரிவித்தாா். இதன் அடிப்படையில் திருப்பத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா், துப்பறியும் நிபுணா்கள், மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினா். விசாரணையின் போது 22 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் திருடப்பட்டிருப்பதாக ஓம்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.