FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பிள்ளையாா்பட்டி பொம்மை, பாத்திரக் கடைகளில் தீ விபத்து

பிள்ளையாா்பட்டியில் உள்ள பொம்மைக் கடை, பாத்திரக் கடைகளில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

23 செப்டம்பர் 2026, 4:44 am IST
பிள்ளையாா்பட்டியில் திங்கள்கிழமை இரவு பொம்மை, பாத்திரக் கடைகளில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டியில் உள்ள பொம்மைக் கடை, பாத்திரக் கடைகளில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. அங்கு அமைந்துள்ள பொம்மைக் கடையில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த 5-க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் பரவியது. இதில் பாண்டிச்செல்வம், காா்த்திக் ஆகியோரின் பொம்மைக் கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

விபத்து குறித்து தகவலறிந்த திருப்பத்தூா் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் அருகிலிருந்த பித்தளைப் பாத்திரக் கடைகள் சேதமடைந்தன. இதுகுறித்து குன்றக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments