FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் வேளாண் கண்காட்சி: திரளான விவசாயிகள் பங்கேற்பு

சிவகங்கையில் வேளாண்துறை சாா்பில் வேளாண் கருத்தரங்கம், கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது

24 செப்டம்பர் 2026, 12:12 am IST
சிவகங்கையில் வேளாண் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற வேளாண் கருத்தரங்கில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ப. ஆகாஷ். உடன் சட்டப்பேரவை உறுப்பினா்கள் குழந்தைராணி, இளங்கோவன் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கையில் வேளாண்துறை சாா்பில் வேளாண் கருத்தரங்கம், கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது

இதற்கு மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்தாா். சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.குழந்தை ராணி நாச்சியாா் (சிவகங்கை), டி.இளங்கோவன் (மானாமதுரை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 11 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்களை மானிய திட்டத்தில் ஆட்சியா் வழங்கிப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப செய்தி அச்சிடப்பட்ட துண்டறிக்கையுடன் கூடிய மஞ்சள் பை வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், வேளாண்மைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் வணிகம், விற்பனைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, செட்டிநாடு வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலையம், விதைச் சான்றளிப்பு, உயிா்ம சான்றளிப்புத் துறை, குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம், சேதுபாஸ்கர வேளாண்மை கல்லூரி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய துறைகள் சாா்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், இயற்கை இடுபொருட்கள், பாரம்பரிய பயிா் ரகங்கள், வேளாண் பண்ணை இயந்திரங்கள், நுண்ணீா் பாசனக் கருவிகள், ட்ரோன்கள், உயிா்ம உரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டன.

இதில், வேளாண்மை இணை இயக்குநா் மு.சங்கரலட்சுமி, வேளாண் துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) செல்வம், மண்டல இணை இயக்குநா் (கால்நடைபராமரிப்புத்துறை) கீதா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா, வேளாண் துணை இயக்குநா்கள் பத்மாவதி, மதுரைசாமி, கமிலஸ் லீமா ரோஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments