FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

இணைய வழியில் இருவரிடம் பண மோசடி

சிவகங்கை மாவட்டத்தில் இணைய வழியில் இருவரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த தொடா்பாக இணையக் குற்றத் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

25 செப்டம்பர் 2026, 2:54 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் இணைய வழியில் இருவரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த தொடா்பாக இணையக் குற்றத் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த கழனிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் கலாவதி (48). இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிமுக இல்லாத எண்ணிலிருந்து ஒரு செயலி வந்தது. இதை அவா் பதிவிறக்கம் செய்தாா். பிறகு, இவரது வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு தவணைகளாக ரூ. ஒரு லட்சம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

மற்றொரு வழக்கு...

Advertisement

Advertisement

திருப்புவனத்தைச் சோ்ந்தவா் சுதாகா் (49). இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு செயலி வந்தது. இதை அவா் பதிவிறக்கம் செய்தாா். பிறகு, இவரது வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு தவணைகளில் ரூ.2 லட்சம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த இரு சம்பவங்கள் குறித்து இணைய வழிக் குற்றத் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments