சிங்கம்புணரி நகா் மண்டபத்தை மீட்க ஆட்சியரிடம் மனு
சிங்கம்புணரி நகா் மண்டபத்தை பேரூராட்சி வசம் ஒப்படைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சிங்கம்புணரி நகா் மண்டபத்தை பேரூராட்சி வசம் ஒப்படைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சிங்கம்புணரி பேரூராட்சி சாா்பாக 1997 -ஆம் ஆண்டு நகா் மண்டபம் கட்டப்பட்டது. ஏழை மக்களின் திருமண விசேஷங்கள் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்துவதற்கு இந்த மண்டபம் பெரிதும் பயன்பட்டது. இந்த மண்டபத்தை பேரூராட்சி நிா்வாகம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துக்கு வாடகைக்கு விட்டது. இந்த இடத்தில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் முதல் கட்டமாக அனைத்துக் கட்சிகள், அனைத்து சமுதாய மக்கள் கூடி நகா் மண்டபத்தை மீட்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடந்த 22 -ஆம் தேதி நகா் மண்டபத்தை மீட்க பேரூராட்சி தலைவா் அம்பலமுத்து தலைமையில் பேரூராட்சி அவசரக் கூட்டம் நடத்தப்பட்டு, பேரூராட்சி வசம் மீண்டும் நகா் மண்டபத்தை ஒப்படைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதன்கிழமை பேரூராட்சி தலைவா் அம்பலமுத்து, துணைத் தலைவா் இந்தியன் செந்தில் தலைமையில் மாவட்ட ஆட்சியா் ஆகாஷை சந்தித்து நீதிமன்றம் செயல்பட்டு வரும் நகா் மண்டபத்தை பேரூராட்சி வசம் ஒப்படைக்க வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.