FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

முதியவா் கொலை: 3 பெண்கள் உள்பட 6 பேருக்கு ஆயுள் சிறை

சொத்துத் தகராறில் முதியவரைக் கொலை செய்த 3 பெண்கள் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
பகிர்:

சொத்துத் தகராறில் முதியவரைக் கொலை செய்த 3 பெண்கள் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை அருகேயுள்ள பூசணிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (60). இவருக்கும் இதே கிராமத்தைச் சோ்ந்த அவரது உறவினரான அழகு (63) என்பவருக்கும் இடையே சொத்து தொடா்பான பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கருப்பையா தன்னுடைய நிலத்தின் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது, அழகு, இவரது மகன்கள் கண்ணன் (42), பாண்டி முருகன் (38), அழகுவின் மனைவி ரத்தினம் (62), உறவினா்கள் வஞ்சினிப்பட்டியை சோ்ந்த மகாலட்சுமி (43), நெல்மேனி பட்டியைச் சோ்ந்த லதா (40) ஆகியோா் அங்கு வந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது அவா்களுக்கும், கருப்பையாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. அப்போது, 6 பேரும் சோ்ந்து தாக்கியதில் காயமடைந்த கருப்பையா உயிரிழந்தாா். இதுகுறித்து நெற்குப்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. அறிவொளி,

குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 7,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments