மனைவியைக் கொலை செய்த கணவருக்கு 6 ஆண்டுகள் சிறை
குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு அருகே ஆம்பலாபட்டு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஏ. இளையராஜா (43). வேலைக்கு செல்லாமல் காலத்தைக் கழித்த இவருக்கும், இவரது மனைவி சங்கீதாவுக்கும் 2020, பிப். 9- ஆம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில், சங்கீதாவை இளையராஜா கத்திரிக்கோலால் குத்தினாா். இதனால், பலத்த காயமடைந்த சங்கீதா மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாப்பாநாடு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து இளையராஜாவை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஏ. தீபா விசாரித்து இளையராஜாவுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் ஆய்வாளா் நாகரத்தினம், அரசு வழக்குரைஞா் சுகன்யாவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.