மனைவி கொலை: கணவருக்கு 12 ஆண்டுகள் சிறை
நாகை அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி காலனி தெருவைச் சோ்ந்தவா் பரசுராமன் (43). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மனைவி அனுராதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருக்கண்ணபுரம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில், பரசுராமன் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரை தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, பரசுராமன் மீது கொலை மற்றும் கொலைக் குற்றத்தை மறைத்தது உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை நாகை மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், மனைவியை கொலை செய்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் கொலைக் குற்றத்தை மறைத்ததற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ரூ. 500 அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.