FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்தல்: இளைஞர் கைது

தேனி மாவட்டம் கூடலூரில், ஆட்டோவில் 450 மதுபாட்டில்கள் கடத்திய இளைஞரை புதன்கிழமை  கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

தேனி மாவட்டம் கூடலூரில், ஆட்டோவில் 450 மதுபாட்டில்கள் கடத்திய இளைஞரை புதன்கிழமை  கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
கூடலூர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கலைச்செல்வன் ஆங்கூர்பாளையம் சாலையில் போலீஸாருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த  ஆட்டோவை மறித்து சோதனையிட்ட போது, அட்டை பெட்டிகளில் 450 மது பாட்டில்கள் இருந்தது.
மேலும், விசாரணையில் அவர், மேலக்கூடலூர் களிமேட்டுப்பட்டியைச் சேர்ந்த சின்னன் மகன் தமிழரசன் (32) என்பதும், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது. போலீஸார் 450 மதுபாட்டில்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments