உத்தமபாளையம் கல்லூரியில் சர்வதேச கணிதவியல் மாநாடு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் சர்வதேச கணிதவியல் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் சர்வதேச கணிதவியல் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
கணிதத்தில் நவீன போக்குகள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு, கல்லூரி முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்து துவக்க உரையாற்றினார். இதில், முனைவர் முகமது ஷெரீப் தொகுத்த "ஸ்பெசல் இஸ்யூ ஆன் அல்ஜீப்ரா அண்ட் அப்ளைடு மேதமெட்டிக்ஸ்' என்ற புத்தகத்தை கல்லூரிச் செயலரும் தாளாளர் தர்வேஷ் முகைதீன் வெளியிட்டார்.
இம்மாநாட்டில் சிறப்பு விருந்திராக இலங்கையை சேர்ந்த இன்ஸ்டியூட் ஆப் மேனேஞ்மென்ட் அண்ட் மேதமெட்டிக்ஸின் பேராசிரியர் சாமந்தி கோனரசிங்கே, திருச்சி ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் நகூர் கனி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்லூரி பேராசிரியர் ஆசிர் ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கினர்.
மாநாட்டில், ஷெரீப் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. போடி சி.பி.ஏ. கல்லூரி பேராசிரியர்கள் இளங்கோ, கிருஷ்ணன், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியர் லாரன்ஸ் ரொசாரியே ராஜ், மேலூர் அரசுக்கல்லூரி பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர் சேர் பெர்சனாக செயலாற்றினர். கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆராய்ச்சியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் என 200-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கல்லூரியின் கணிதத்துறை தலைவர் முகமது ஷெரீப் வரவேற்றார். பேராசிரியர் ரெக்னா சல்மா நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.