முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய முதியவரை தேடும் பணி தீவிரம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் இழுத்துச் சென்ற முதியவரை வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் இழுத்துச் சென்ற முதியவரை வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி(60). இவர் பந்தல் அமைக்கும் வேலை செய்து வந்தார். புதன்கிழமை மாலை வேலைகளை முடித்து விட்டு அருகே உள்ள முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றதால், தண்ணீர் அவரை இழுத்துச் சென்றது. குளிக்கச் சென்றவரை காணாததால், இவரது குடும்பத்தினர் கூடலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் தீயணைப்புத்துறை உதவியுடன் 2-வது நாளாக தேடிவருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.