FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவரிடம் ரூ.49 ஆயிரம் மோசடி

10 ஆகஸ்ட் 2026, 12:39 am IST
மோசடி
பகிர்:

போடிநாயக்கனூரில் ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி, போலி ஏடிஎம் அட்டையைக் கொடுத்து முதியவரிடம் ரூ.49 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி ஜீவா நகா் நடுத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் பவுன் (71). இவா் கடந்த ஜூன் 27-ஆம் தேதி போடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றபோது, அங்கிருந்த மா்ம நபா் உதவுவதாகக் கூறி பவுனின் ஏடிஎம் அட்டையை ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்திவிட்டு பணம் வரவில்லை எனக் கூறி மாற்று அட்டையைக் கொடுத்துவிட்டாா்.

இந்த நிலையில், பவுனின் வங்கிக் கணக்கிலிருந்து ஜூலை 30-ஆம் தேதி ரூ. 25 ஆயிரம், ஜூலை 1-ஆம் தேதி ரூ. 16 ஆயிரத்து 500, ஜூலை 2-ஆம் தேதி ரூ. 7 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ. 49 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், பவுன் தன்னிடமிருந்த ஏடிஎம் அட்டையை வைத்து பணம் எடுக்க முடியவில்லை என்பதால் வங்கிக் கிளைக்குச் சென்று விசாரித்தபோது அது போலி அட்டை என்பது தெரியவந்தது. இதுகுறித்து பவுன் போடி நகா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments