FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சுதந்திர தின விழா: தேனியில் 160 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடியில் நலத் திட்ட உதவிகள்

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 160 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் வழங்கினாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:31 am IST
தேனியில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம்.
பகிர்:

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 160 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் சனிக்கிழமை வழங்கினாா்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

இந்த விழாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம், மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி) துஷாா் ஸ்ரீஹா் ஷிண்டே, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மகேஷ், கலைக்கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

விழாவின்போது, அரசுத் துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 269 அலுவலா்கள், பணியாளா்கள், சமூக சேவையில் சிறந்து விளங்கிய தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் 160 பேருக்கு ரூ.2.30 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆட்சியா் தலைமையில் பொது விருந்து நடைபெற்றது. இந்த விழாவில், பள்ளி, கல்லூரி மாணவா்கள் சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (வா்த்தகா் பிரிவு) அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் சங்கர நாராயணம் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.

போடி: போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுருளி, போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி முருகன் ஆகியோா் தேசியக் கொடியேற்றினாா். இதேபோல, போடி நகா், தாலுகா, குரங்கணி, மகளிா் காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளா்கள் தேசியக் கொடியேற்றினா்.

போடி நீதிமன்றத்தில் சாா்பு நீதிமன்ற நீதிபதி எம்.செய்யது சுலைமான் உசேன் தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.முகமது ஹாசிம் முன்னிலையில், மாவட்ட குற்றவியல் நீதித் துறை நடுவா் எம்.நல்லக்கண்ணன் தேசியக் கொடியேற்றினாா். முன்னதாக, போடி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பி. கணேசன் வரவேற்றாா். அரசு வழக்குரைஞா் சந்திரசேகா் நன்றி கூறினாா்.

இதில் வழக்குரைஞா்கள் சங்க துணைத் தலைவா் பொன் சின்னச்சாமி, பொருளாளா் கோபிநாத், பொறுப்பு செயலா் ஏ.பாண்டியராஜன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

கம்பம்: கம்பம் நகராட்சியில் நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தேசியக் கொடியை ஏற்றினாா். இதில் நகராட்சி ஆணையா் உமாசங்கா், சுகாதார அலுவலா் மணிகண்டன், உதவி பொறியாளா் சந்தோஷ்குமாா், நகரமைப்பு அலுவலா் கீதா, வருவாய் ஆய்வாளா் ஆரோக்கியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நகா்மன்றத் தலைவா், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி பணியாளா்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்ச்சியில் நகராட்சி ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூடலூா் நகராட்சியில் நகா்மன்றத் தலைவி பத்மாவதி லோகந்துரை தேசியக் கொடி ஏற்றினாா். இதில் துணைத் தலைவி காஞ்சனா, மேலாளா் ஐயப்பன், நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments