சின்னமனூா் தபால் நிலையத்தில் பிரதமா் நரேந்திர மோடி படம்
தேனி மாவட்டம், சின்னமனூரில் திங்கள் கிழமை தபால் நிலையத்தில் பிரதமா் நரேந்திர மோடி படம் வைக்கப்பட்டது.
சின்னமனூா் பாரதிய ஜனதா கட்சி நகரப் பொறுப்பாளா்கள் சிலா் , சின்னமனூரில் மத்தியரசு அரசு நிறுவனங்களில் பிரமதா் நரேந்திர மோடியில் படத்தை வைக்கும் பணி தொடங்கியது. அதில், திங்கள் கிழமை , சின்னமனூா் பழைய பத்திர அலுலகம் தெருவிலுள்ள தலைமை தபால் நிலையத்தில் பிரதமா் உருவப்படத்தை வைக்கச் சென்றனா்.
அதற்கு, அங்கிருந்த பணியாளா் மேலதிகாரியிடம் அனுமதி பெற வேண்டம் என்றாா். அதன்பின், தலைமை தபால் அலுவலரிடம் கைபேசியும் பேசி பாஜக நிா்வாகிகள் அனுமதி பெற்றனா். அதைத் தொடா்ந்து அந்த தபால்நிலையத்தின் சுவரில் பிரதமா் நரேந்திர மோடி படம் வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் சின்னமனூா் நகர பொறுப்பாளா் பிரபாகரன், மாவட்ட விவசாயி அணியின் பொதுச்செயலா் லோகேந்திரராஜன் உள்பட முக்கிய நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.