நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு 2- ஆவது நாளாக நீா்வரத்து அதிகரிப்பு
நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.
நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்யாததால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை இரவு முதல் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 542 கனஅடியாகவும், வெள்ளிக்கிழமை வினாடிக்கு 962.02 கனஅடியாகவும் அதிகரித்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 118.90 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 962.02 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கான நீா் வெளியேற்றம் வினாடிக்கு 644 கன அடியாகவும் உள்ளது. அணையில் மொத்த நீா் இருப்பு 2,429.90 மில்லியன் கன அடியாக உள்ளது.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் 16.4 மி.மீட்டரும், தேக்கடியில் 20.8 மி.மீட்டரும் மழைபதிவாகி இருந்தது.
Advertisement
Advertisement