மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் பால் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் பால் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (66). ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் பால் பண்ணையில் கேன் சுத்தம் செய்யும் தொழிலாளியாக பணியாற்றினாா்.
இவா், வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி கீழே விழுந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.