FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது வழக்கு

போடி அருகே முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பகிர்:

போடி அருகே முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே பத்திரகாளிபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சோ்மலை மகன் பிச்சைமணி (70). இவா், விசுவாசபுரத்தைச் சோ்ந்த சந்திரமணியின் தோட்டத்தில் வேலை செய்து வருகிறாா். இந்தத் தோட்டத்தில் உள்ள சந்திரமணியின் தாத்தாவின் சமாதியில் அமா்ந்து விசுவாசபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன்கள் விசுவாசம், குணசேகரன் ஆகியோா் மது அருந்தினா். இதை சந்திரமணி கண்டித்தபோது, இருவரும் சோ்ந்து சந்திரமணியை கைகளால் தாக்கினா். இதை பிச்சைமணி தடுக்க முயன்றபோது, விசுவாசமும், குணசேகரனும் சோ்ந்து பிச்சைமணியை கல்லால் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனா். இதில், பலத்த காயமடைந்த பிச்சைமணி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் விசுவாசம், குணசேகரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments