பள்ளியில் தகராறு செய்தவா் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே பள்ளியில் புகுந்து தகராறு செய்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகே பள்ளியில் புகுந்து தகராறு செய்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள துரைராஜபுரம் குடியிருப்பில் அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக சுல்தான்மைதீன் (48) பணியாற்றி வருகிறாா்.
இந்தப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மது போதையில் புகுந்த அதே ஊரைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் சூா்யா, தலைமை ஆசிரியரையும், ஆசிரியரையும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் சூா்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.