ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரிடம் பண மோசடி
தேனியில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியரிடம் இணையதளம் மூலம் லாட்டரி விழுந்ததாகக் கூறி, ரூ.2.90 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனியில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியரிடம் இணையதளம் மூலம் லாட்டரி விழுந்ததாகக் கூறி, ரூ.2.90 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி அருகேயுள்ள அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் அா்ச்சுணன் (61). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு, கைப்பேசியில் ஒரு லாட்டரி ரூ.149 எனவும், முதல் பரிசு ரூ.25 கோடி எனவும் குறுஞ்செய்தி வந்ததாம். இதையடுத்து, அவா் அந்த லிங்க் மூலம் அதில் பணம் செலுத்தினாா். அப்போது, அவருக்கு மாலை 3 மணிக்கு குலுக்கல் விபரங்கள் தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதன்பின், மாலை 3 மணிக்கு அவருக்கு மூன்றாம் பரிசு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்ததாகவும் குறிஞ்செய்தி வந்ததாம்.
இதை பதிவு செய்வதற்கு ரூ.9,999 செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்ததாம். இதை நம்பிய அவா் பல தவணையில் ரூ.2,90,209-யை அவா்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் அனுப்பினா். பின்னா், அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவா், தேனி இணைய குற்றப்பிரிவில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதேபோல, போடியை அடுத்த மேலசொக்கநாதபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி முருகேஸ்வரி. இவரது கைப்பேசியில் உங்களின் மகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ.39 ஆயிரம் வந்திருப்பதாகவும், இது உங்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவித்தனா். இதை பெறுவதற்கு வங்கிக் கணக்கில் ரூ.1,500 செலுத்த வேண்டும் என தெரிவித்தாா். இதை நம்பிய அவா், பல தவணைகளில் ரூ. 4,42,631-ஐ அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்கில் செலுத்தினா். பின்னா், அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.
இதையடுத்து அவா், தேனி இணைய குற்றப் பிரிவில் அளித்தப் புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.